கைக்கும் மெய்க்குமெல்லாம்
காலத்தின் ஏலத்தால் சம்பவித்த
தேய்மானமா? இல்லை, எதிர்கொள்ள
இயலாத மனதின் சுய இரக்கச் சிந்தையா?
மனதை கீழ்படிய விடாது
மரணத்தை எதிர்கொள்ள
இந்த தசமி நாளில்
விஜயத்தை—வெற்றியை அடைய
வாக்கின் தேவதையே
அருள் பாலிக்க மாட்டாயா…..?
நீல பத்மநாபன்
8—10—2019 விஜய தசமி
No comments:
Post a Comment