Monday, June 28, 2010

ஆத்மானந்தம்

ஆத்மானந்தம்

அறிவாளிகளிடம்
அசடனாகவும்
அசடர்களிடம்
அறிவாளியாகவும்
மேலும் கீழும்
தத்தளிக்கும் மனமே
அறிவாளியிடம்
அறிவாளியாக
இயலாவிடிலும்
அசடனிடமும்
அசடனாகலாமல்லவா
மேலும் மேலும்
அறிவதால்
அகந்தையை அகற்று
ஆத்மானந்தம் கொள்வாய்

பேரானந்தம்

ஒரு வாசல்
அடைந்துவிட்டதென்று
ஓய்ந்துவிடாதே
உனக்குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒம்பது வாசல்கள்
ஒவ்வொன்றாய்
திறந்திட
முயற்சிச்செய்வாய்
பேரானந்தம்
பெருகிடக் காண்பாய்

போதும்

போதும்

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே சதா

அருள்ஜோதியே
இத்தனை நாள் வாழவிட்டாய்
எண்ணியவை எல்லாம்
அடைந்ததாய் ச்சொல்லவில்லை
ஆனால்
எண்ணாதவை
மனதுக்கு
இதம் அளிப்பவை
அல்லாதவை
தந்தருளியிருக்கிறாய்
இனியுமென்னை
எண்ணவிடாதே
ஆசைப்படத் தூண்டாதே
போதும் போதும்
என்ற நெஞ்சைத்
தந்து என்னை
ஏற்றுக்கொள்வாயாக

நீல பத்மநாபன்
விஜயதசமி(17-10-2010 ஞாயிறு)

தாத்தாவின் கட்டில்

தாத்தாவின் கட்டில்

கொல்லையில் பலாமரத் தையொன்று
நட்டு ஆசையுடன் நீர் வார்த்து
தளிர் வருதா தண்டு வளருதா என்று
ஆர்வமுடன் வளர்த்தினாள் பாட்டி
ஆண்டாண்டு பள்ளிவிடுமுறைக்கு
பலாப்பழ ஆசை அலைமோத
பாட்டிவீடு வரும் பேரன்பேத்திகள் நாங்கள்
நெடுமால் திருவாய்
நெடுநெடுவென மேலே மேலே
வளர்ந்து உயரும் மரம்
கிளைபோடவில்லை
பூக்கவில்லை..காய்க்கவில்லை
ஆடிக்காற்றில் அடிபதறி
அய்யோவென்றுஒருநாள்
தலைசாய்ந்த கோரம்
விறகாக்க வந்தவர்களை விரட்டிவிட்டு
ஒட்டுமரப்பலகைப் பிய்ந்து
அவலட்சணமாய்க் கிடந்த கட்டிலில்
தலைச்சாய்த்த பலாமரத்தாய்த்தடியை
பலகைகளாக்கி பரப்பிமெருகு பண்ணி
அவர் சயனிக்கும் சூரல் இழைக்கட்டிலின்
பக்கவாட்டில் போட்டுக்கொண்டார் தாத்தா
பாட்டி,அம்மா,சித்தி,மாமா,மாமி யாரும்
அந்த கட்டிலின் பக்கம் போகவேயில்லை
பாவம், தாத்தா மட்டும் கிடக்கிறாரேயென்று
படுக்கச்சென்ற பேரன் பேத்திகள் எங்களையும்
வேண்டாம், உடம்பு வலிக்கும்,
தூக்கத்தில் கீழே விழுந்துடூவீங்க
-ஒரேயடியாய் தடுத்துவிட்டாள் பாட்டி
*
முற்றத்தில் கொணர்ந்து போட்டிருக்கும்
அந்தகட்டிலில் தாத்தாவின் வெற்றுடம்பு
தலையில் எண்ணைத் தேய்க்கிறார்கள்
குளிர்ந்த நீர்விட்டு குளிப்பாட்டுகிறார்கள்
பட்டையாய் திருநீறிட்டார்கள்
வாய்க்கரிசி போட்டார்கள்
சுற்றிவந்து மாரடித்து
ஒப்பாரி வைத்தார்கள்
நாங்களும் அழுதோம்
அன்றொருநாள் எங்களிடம் தாத்தா
‘எனக்கிந்த கட்டில் பயன்படும் ஒருநாள்’
என்று சொன்னது இதைத்தானா

நீல பத்மநாபன்

தலைமுறைகள் நாவல் பற்றி ஒரு வாசகர்

தைலமுைறகள்
ஐயா,
“ஆண்டவேன... எம்ெபருமாேன... சிங்கவினாயகா...!” என்று விடியைல
வரேவற்கும் உண்ணாமைல ஆச்சியின் பக்திப் பிரவாகத்ேதாடு துவங்கும் இந்த
நாவைல நான் 1969 ஆம் ஆண்டு ஒரு மாணவனாக பள்ளி நூலகத்திேல
முதன் முதலாக படித்ேதன்.
இந்த 40 ஆண்டுகளிேல எத்தைன முைற படித்திருப்ேபன் என்று கணக்கு
ைவத்து ெகாள்ளவில்ைல.
என் ஊேனாடும் உணர்ேவாடும் கலந்து ேபான நாவல்; என் சுவாசகாற்ைற
ேபால என்ைன விட்டு பி􀂾ய மறுக்கிறது.
கைத நடக்கும் நாஞ்சில் 􀂪மிக்கு அருகான திருெநல்ேவலி நான் பிறந்த மண்
என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி; ெபருைம; ஏன் கர்வெமன்ேற கூட
ெசால்ேவன்.
இந்த வட்டார ெமாழி, இங்கு வாழும் மக்களின் கைல, இலக்கிய பண்பாடுகள்,
மத, இன உணர்வுகள் அைனத்ைதயும் ஒன்று விடாமல் கைதக்குள்ேள
வார்த்ெதடுத்திருக்கிற பாங்ைக எப்படி பாராட்டுவெதன்ேற ெத􀂾யவில்ைல.
வாசகர்கைள ைக பிடித்து கைதக்குள்ேள நீங்கள் அைழத்து ெசல்லும் லாவகம்
தான் என்ேன!
ஆசி􀂾யர் கூற்றாகவும், கதாபத்திரங்களின் கூற்றாகவும் பவனி ெசய்யும் கைத,
என்ைன ஒரு ரம்மிய உலகுக்கு அைழத்துச் ெசல்வதும் அதேனாடு இையந்து
நான் நைட ேபாடுவதும் நிைனைவ விட்டு நீ ங்காத அனுபவங்கள்.
முழுக்க முழுக்க உங்களது கற்பைன என்ேற நீங்கள் ெசால்லியிருந்தாலும்,
இது கண்முன்ேன நடந்த ஒரு உண்ைமக்கைத என்ற உணர்ைவ
வாசகர்களுக்குள் ஏற்படுத்திவிட்டீர்கள். அது நாவல் தந்த தங்கள் ேநாக்கத்தின்
ெவற்றிைய உறுதிப்படுத்திவிட்டது.
ேகரள மாநில மின் வா􀂾யத்தின் கண்காணிப்பு ெபாறியாளராக இருக்கின்ற
ஒருவர், ெபாதுவாக ஆங்கில நாட்டம் அதிகமிருக்கிற ஒரு துைற சார்ந்த,
அதுவும் ெபாறியாளருக்கு இப்படிபட்ட கற்பைன திறனும் ெமாழி
பாண்டித்தியமுமா? என்று நான் வியக்காத நாட்கள் குைறவு.
தான் சார்ந்திருக்கிற இந்த சமுதாயத்ைத எந்த அளவிற்கு உற்று
ேநாக்கியிருந்தால் இப்படிப்பட்ட ஒரு கைத களத்ைத அைமத்திருக்க
முடியுெமன்று அந்த சிறிய வயதில், ஏன் இப்ேபாது கூட நான் எண்ணி
எண்ணி வியந்து ேபான(வ)துண்டு.
இந்த கைதயின் நாயகனான திரவியாய் என்ைன நான் கற்பைன ெசய்து
ெகாள்வது ஒரு சுகானுபவம்.
திரவியின் வாழ்க்ைக என் வாழ்க்ைகைய பிரதிபலிப்பதனால் இருக்கலாம்.
திரவி என்ற நாற்று வளர்ந்து விரு􀂊மாவதற்குள் சந்திக்கும் பிரச்சைனகள்
தான் எத்தைன? எத்தைன?
ஒரு நடுத்தர மனிதனின் வாழ்க்ைக ேபாராட்டங்கள் தான் எத்தைன?
எத்தைன?
மகிழ்ச்சி வானில் சிறகடித்த பிள்ைள பருவத்திலிருந்து, ெபாறுப்புகளும்,
கவைலகளும் ஆக்கிரமித்து ெகாள்கின்ற 53 வயதான இன்று வைர
என்னுடேனேய பயணம் ெசய்கின்ற நாவல்.
நிழெலன்று ெசால்ல மாட்ேடன்.
ஆதவனின் ஆதிக்கமில்லா காலங்களில் நிழல் கூட நம்ைம பி􀂾ந்து
ேபாகுெமன்பதால்.
தைலமுைறகளுடன் ஒரு ேபாதும் பி􀂾ைவ அனுமதிப்பதில்ைல.
இறுதி வைர என்னுடன் வரும்; வர ேவண்டும் என்று விரும்புகிேறன்.
ஏெனன்றால் தைலமுைறகள் என் கவைல தீர்க்கும் அருமருந்ெதன்பைத நான்
எப்ேபாேதா கண்டு ெகாண்டுவிட்ேடன்.
எப்ெபாெதல்லாம் மனம் சஞ்சலபடுகிறேதா; எப்ெபாெதல்லாம் மனம் பாரமாக
ேதான்றுகிறேதா அப்ேபாெதல்லாம் நான் அைடக்கலம் ேதடுவது
தைலமுைறகளுக்குள்ேள தான்.
அது என்ைன ஒரு ேபாதும் ஏமாற்றியதில்ைல; மனைத இலகுவாக்க
தவறியதில்ைல; தாலாட்ட மறுத்ததில்ைல.
என்ைன ெபாறுத்த வைர தைலமுைறகள் என் தாய்.
அறியா பருவத்தில் அன்ைனயின் மடி தந்த ஸ்ப􀂾சத்ைத, சுகத்ைத; பாசத்ைத
தைலமுைறகள் தருவதால் தைலமுைறகள் என் தாய்.
பைடப்பு இைற ெதாழிெலன்றால் தைலமுைறகைள பைடத்த உங்கைள நான்
இைறவனாகேவ காண்கின்ேறன்.
எவரும் ஆட்ேசபிக்க முடியாது; நீ விர் உட்பட.
சாதைனயாளர்கைள ெகௗரவிப்பதற்ெகன்ேற ேநாபல் ப􀂾சு.
ஆனால் அந்த ேநாபல் ப􀂾ைசேய ெகௗரவிக்க ேவண்டுெமன்று எண்ணிய
ேபாது தான் அது அன்ைன ெதரசாவிற்கு வழங்கப்பட்டெதன்று எங்ேகா
படித்தது நிைனவிற்கு வருகிறது.
அேத ேபால் சாஹித்திய விருைத தங்களுக்கு வழங்கி அது தன்ைன
ெகௗரவப்படுத்தி ெகாண்டுள்ளது என்று எண்ணுகிேறன்.
மூத்த பிள்ைள மூக்காண்டி ெசட்டியார் (கைத நிகழும் காலத்திற்கு முன்னேர
காலமான கதாபாத்திரம்)
உண்ணாமைல ஆச்சி
நாகரு பிள்ைள
நாகம்ைம
உண்ணாமைல அக்கா
தவஸி பிள்ைள அத்தான்
நாகு அக்கா
சிவனைணந்த ெபருமாள் பிள்ைள
திரவியம்
சாலம்
கூனாங்காணி பாட்டா
ெபாணமு ஆச்சி
அணஞ்சி பிள்ைள ஆச்சி
பிச்ச பிள்ைள மாமா
மாலு பிள்ைள மாமா
ஆண்டி பிள்ைள மாமா
ஐயாவு பிள்ைள மாமா
தாயி சித்தி
ேகாலப்ப சித்தப்பா
நீலா பிள்ைள சித்தி
ேகாராமி வாத்தியார்
பத்மனாபபுரம் பாட்டா
குத்தாலம்
அம்மச்சி
கிருஷ்ணன் குட்டி
சசி
அம்மணி குட்டி
பார்கவி
ெசல்லன் நாடார்
ஆஹா; ஆஹா; உயிேராடு கலந்து ேபான உறவுகள்.
இவற்றில் ஒரு கதாபாத்திரத்ைத கூட அதன் உறைவ நீக்கி நான் எண்ணி
பார்ப்பதில்ைல.
இவர்கள் அைனவருேம எனது உறவுகள் என்ேற நிைனக்கிேறன்.
உண்ைமயில், என் உறவில் இத்தைன மனிதர்கைள நான் நிைனவில்
ைவத்திருக்கிேறனா? என்று என்ைன நாேன வினவி பார்க்கிேறன்.
இல்ைல என்பேத பதிலாக அைமகிறது.
பால பருவத்திலிருந்து ‘ெப􀂾ய மனுஷி’யாகும் சாலம், நாகு அக்காவின்
திருமண ைவேபாகம்; உண்ணாமைல அக்காவின் சீமந்தம்; - இந்த
சமயத்திேல ெசய்யப்படும் சடங்குகள்; பின்பற்றப்படும் சாஸ்திரங்கள்,
சம்பிரதாயங்கள் - கணினியின் ஆதிக்கமும் ஆங்கில ேமாகமும் ேகாேலாய்ச்சி
ெகாண்டிருக்கும் இன்ைறய தைலமுைறயினருக்கான கால ெபட்டகம்; கருத்து
ேபைழ என்றால் மிைகயல்ல.
ெப􀂾ய மனுஷி இது உங்கள் ெசால்லாட்சி!
என்ன ஒரு கண்ணியமிக்க ெசால்லாட்சி!!
கூனாங்காணி பாட்டாவின் வாழ்க்ைக - ெநறி பிறழும் மனிதர்களுக்கான
சவுக்கடி
ெசவந்த ெபருமாள்கள் இன்றும் ெவவ்ேவறு ெபயர்களில்
உலவிக்ெகாண்டுதானிருக்கிறார்கள்.
சமுதாயத்தின் துயர் துைடக்க ஓேடாடி வரும் பாமர குத்தாலிங்கங்கள்
இன்றும் நம்மிைடேய இருக்கதான் ெசய்கிறார்கள்.
இலக்கியங்கேள இலக்கணங்களாகும் அதிசயம் எப்ேபாதாவது நிகழும் என்று
சான்ேறார்கள் ெசான்னதுண்டு; நம் இதிகாசங்கைளப் ேபால.
அவ்வ􀂾ைசயில் தைலமுைறகைளயும் நான் ேசர்த்துக்ெகாள்கிேறன்.
என்ைன சான்ேறானாக்கி ெகாள்ளவன்று.
தைலமுைறகள் ஒரு சமுதாயத்திற்கான இலக்கண வைரயைற என்பது
மட்டுேம என் கருத்திற்கு அடிப்பைட.
அன்ைன வயிற்றில் கருவானதிலிருந்து மண்ணில் சங்கமிக்கும் வைர
நானறிந்த இந்த சமுதாயத்தின் எந்த சம்பவங்கைளயும், சாஸ்திரங்கைளயும்,
சம்பிரதாயங்கைளயும் விட்டு விடாமல் எதுவும் பிசகாமல்; பிறழாமல் இப்படி
வடித்ெதடுக்க இயலாெதன்ேற எண்ணுகிேறன்.
ஒரு நூற்றாண்டு வாழ்ந்து கவனித்தால் கூட சாத்தியமில்ைல
சாமானியர்களுக்கு.
நீவிர் சாமானியர் அல்லேவ.
கற்பைன கலந்து, வரலாற்று பின்னணி ெகாண்டு, புராணங்கைள தழுவி,
சிந்தைனயும் ெமாழியும் வசப்படுகிற எவரும் புதினங்கைள பைடத்திட
இயலும்.
ஆனால் தைலமுைறகள்?
இைறயருளால் மட்டுேம சாத்தியம்.
அந்த வைகயில் தாங்கள் இைறயருள் ெபற்றவர்.
ஐயெமன்ன?
முடிந்த முடிவு.
சற்று முன் உங்கைள இைறவன் என்ேறன்; இப்ேபாது இைறயருள் ெபற்றவர்
என்கிேறன்.
எது ச􀂾?
இது ஒரு மயக்க நிைல ேபாலும்.
இைறயருளாளைர இைறவனாகேவ இந்து மதம் ஏற்று ெகாண்டுள்ளது.
அப்படியானால் என் எண்ணம் ச􀂾.
தைலமுைறகைள விமர்சனம் ெசய்வெதன்றால் எனக்கு ேபாதிய ெமாழித்திறன்
இல்ைல என்பதாலும், ஒருேவைள ேபாதிய ெமாழித்திறன் ெபற்றிருந்தால் கூட
அது தைலமுைறகளின் ப􀂾மாணத்ைத விஞ்சுெமன்பதாலும்
சிற்றறிவுக்குப்பட்டைத மட்டும் தந்திருக்கிேறன்.
ெசால் மற்றும் ெபாருட்குற்றங்கள் காணின் சிறு மதிேயனின் மடைமயாய்
கருதி ெபாறுத்தருள்க.
நான் இன்னாெரன்று இதுவைர ெசால்லவில்ைலயல்லவா?
இேதா நான்.
ெச. சண்முகேவல்ராஜா என்பது என் ெபயர்.
வயைத மட்டும் துவக்கத்திேலேய ெசால்லிவிட்ேடன்
தற்சமயம் வாசம் ெசய்யுமிடம் ெசன்ைன.
ஒரு கால் நூற்றாண்டு வங்கி அதிகா􀂾 பணிக்கு பின் விருப்ப ஓய்வு
ெபற்றவன்.
எனது ைக ேபசி எண்: 98840 90725; - மின்னஞ்சல்: raja28586@yahoo.co.in
விலாசம்: இலக்கம் 6/2 ஹில் டாப் அபார்ட்ெமன்ட், வடக்கு ராஜா ெதரு,
ஆலந்􀂣ர், ெசன்ைன 600016
ெசன்ைன உண்ைமயுள்ள அன்பன்,
02.08.2010 ெச.சண்முகேவல்ராஜா

noon time rain

NOON TIME RAIN

By the forceful
small waterfalls
from the sunshade
light violet
kanakambara flowers
in the front courtyard
are cut down neck-less
mind is filled
with the mournful
darkness of the dusk

காமிரா கண்

காமிரா கண்

முதுமையிலும் இனிமை காண
உறுப்புக்கள் ஒத்துழைக்காதிருந்தும்
வயதேறுவதை பொருட்ப்படுத்தாமல்
இளமை மிடுக்கை மனதில் மேயவிட்டு
வாழ முயன்றுகொண்டிருக்கையில்
குறிப்பிட்ட கோணங்களில்
அடிக்கடி படமெடுத்து
பத்திரிகைகளில் போட்டு
படுகிழமென்று பகிரங்கப்படுத்தும்
காமிராக்காரர்களுக்கு தெரிவிக்கவேண்டியது
நன்றியா எதிர்ச்சொல்லா

Friday, June 11, 2010

பள்ளிகொண்டபுரம் சினிமா-நீதிபதி தீர்ப்பு

செய்தி
பள்ளிகொண்டபுரம் சினிமா பெயரிடும் பிரச்னை

நாவலாசிரியர் நீலபத்மநாபனின்
அனுமதி பெறவேண்டும்

திருவனந்தபுரம் மாவடட நீதிபதி தீர்ப்பு

திருவனந்தபுரம்,ஜூன் 10
பள்ளிகொண்டபுரம் என்ற சினிமா பெயரிடும்
வழக்கில் நாவலாசிரியர் நீலபத்மநாபனின்
அனுமதி பெறவேண்டும் என்று திருவனந்தபுரம்
மாவட்ட நீதிபதி கவுசர் தீர்ப்பு கூறினார்.
அனில்குமார் தயாரித்துவரும் புதிய தமிழ்
சினிமா ஒன்றுக்கு பள்ளிகொண்டபுரம் என்று
பெயரிட்டு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலாசிரியர்
நீலபத்மநாப்ன் பள்ளிகொண்டபுரம் நான் எழுதிய
நாவலாகும், இந்தபெயரை சூட்டக்கூடாது என
வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.மாவட்ட 3-வது நீதிமன்ற
நீதிபதி கவுசர் கூறிய தீர்ப்பில் புதிய
சினிமாவிற்கு பள்ளிகொண்டபுரம் என்று
பெயரிடவோ நாவலின் ஒரு பகுதியை சினிமாவில்
சேர்ப்பதற்கோ நீலபத்மநாபனின் அனுமதி
பெறவேண்டும் என்று கூறினார். தினத்தந்திநாகர்கோவில் 10-6-2010 வியாழக்கிழமை

Thursday, April 15, 2010

தலைமுறைகள் தாண்டிய பாட்டு

தலைமுறைகள் தாண்டிய பாட்டு

பூவுடன் இணைந்த மணம் போல்
அழகுடன் கமழ்ந்த திறனால்
களபலியான தங்கம்மையே தாயம்மையே
அந்தப்புரம் அழைத்து
அறநெறி தவறிய
கொற்றவனின் கொடும் நீதியில்
குமுறிக் கொந்தளித்து
பிறவி அளித்த அன்னை மண்ணிலேயே
கன்னிகழியா கண்மணிகள் உம்மிருவரை
உயிருடன் கரைத்துவிட்டு
மலையும் மடுவும் தாண்டி
நதியும் கரையும் கடந்து
தெற்குத் தெற்கொரு தேசமாம்
பசுமைசூழ் வள்ளியாற்றங்கரை
இரணியல் வந்து
எங்களுடன் பயணித்த
சிங்க விநாயகரையும்
அவர் பார்வையிலேயே
ஒடுப்பறையில் நாகரம்மனையும்
நாகரம்மன் சன்னிதியில்
தங்கம்மை தாயம்மை
உம்மிருவரையும் குடிவைத்தோம்
கும்பிட்டோம
தலைமுறை தலைமுறைதாண்டிவந்து
பகைமறந்து மன்னித்து
பாரிடமெங்கணும்
மாதர்குல நீதிகள்
செழித்தோங்கிட
பொங்கலிட்டோம் குரவையிட்டோம்
வாழ்த்துறோம் வணங்குறோம

நீல பத்மநாபன்்

Friday, January 8, 2010

3 கவிதைகள்

விஜய தசமி
சென்ற விஜயதசமி
கடல் கடந்த
சீதள பூமியில்
இன்று இங்கே
சொந்த வீட்டில்
பூஜையறையில்
யாருமில்லாத
தந்நதனிமை
முன்னால்
வாக்தேவதை
நீ
சுற்றி ஏனைய
தேவதைகள் தேவர்கள்
வெளியில் வீதியில்
வாகனங்களின் சந்தடியில்
உள்ளே மனப்பாதையில்
வாழ்வின் கசப்புக்களில்
வழுதிச்செல்லும் மனதை
பிடித்திழுத்து
உன் பாதசரணத்தில்
உன் வீணைநாதத்தில்
கரைத்திடும்
விடாமுயற்சி
வெற்றிபெற அருள்வாய்2006

பெயரினை நீக்கிய பிறகும்
செத்தபின் சிவலோகம் வைகுண்டம்
இல்லை நரகமோ போவது இருக்கட்டும்
விட்டுவந்த வெறுங்கூண்டை
கண்ணாடிப்பேழைக்குள்
காட்சிப்பொருளாக்கி
ஊரூராய் இழுத்துவந்து
விழாவெடுப்பதும்
கட்டையில் வெந்தபின்னர்
கலையங்களிலாக்கி
இங்குமங்கும் இறைப்பதும்
பத்திரப்படுத்துவதும்
அங்கிங்கில்லானபடி
எங்குமே நிறைந்திடும்
ஆத்மாவின்
சாந்திக்கா இல்லை
நினைப்பொழிக்கத்தானா 8-7-2009ஹரி ஸ்ரீ கணபதாயே நமஹ
இன்னுமொரு விஜயதசமி
வாக் தேவதையே
உன் முன,
வாக்குகள் வந்தழுத்தி
திக்குமுக்காடித்திணறிப்
பரிதவித்த நாட்கள
பழங்கனவாய்
இன்று
வாக்குகள் வழுதிச்செல்லும்
சூன்யமான
வற்றிவரண்ட நெஞ்சமுடன்
வீற்றிருக்கிறேன்
எழுத்தாணி கையிலெடுத்து
உனை முன்நிறுத்தி
எண்ணும் எழுத்தும்
கற்பித்த
ஆதிநாளில்
ஆசான் மடியிலிருந்து
அவர் கைபிடித்து
புத்தரிசி பரப்பிய
தாம்பாளத்தில்
தங்கமோதிரத்தால்
கிறுக்கிய
அதே வரியை
கிறுக்குகிறேன்
ஓம் கணபதாயே நமஹ 28—9-2009