Thursday, June 9, 2022

எதிர்பார்ப்பு

ஒரு கோணத்தில் பார்த்தால்

ஒவ்வொரு படைப்பாளியும்

வழியருகில் கிடக்கும்

கொட்டும் கோலும் தான்……

வருகிறவர்கள், போகிறவர்கள்,

வழிப்போக்கர்கள், சிலர் பலர், யாவருக்கும்

கொட்டிப்பர்க்கவேண்டுமென்ற அரிப்பு….

டும் டும்….

டும்…..டும்….

சுருதி லயத்தை

எதிர்பார்த்து, எதிர்பார்த்து,

காத்திருப்பு,

காலம் காலங்காலமாய்………..

நீல பத்மநாபன் 9—8---2021

 


No comments: