கவிதை
நேற்று
இன்று
நீல பத்மநாபன்
தன் காரிய சித்திக்காக
பரஸ்பரம் சிரம் கொய்து
பொன் தாம்பாளத்தில்
வைத்து
ஐயனே உம்
பாதாரவிந்தத்தில்
சுயம் சமர்ப்பித்து
சிந்தை
குளிர்ந்திருந்தோம் நாங்கள்..........
உம்மை தூக்கியெறிந்த
பின்னர்
சாட்டைவார் வீசி
இட்டுச்செல்ல நாதனின்றி
பரஸ்பரம் பழி கூறி
தந்த கோபுரத்தில்
தம் போக்கில்
ஆடிக்களிக்கிறோம்......
No comments:
Post a Comment