தேடித் தேடி
அமைதியைத் தேடிதேடி
அவனியில் சகல
சராசரங்களுக்கும்
சாந்தியும்
சமாதானமும் அளிக்கும்
ஆண்டவன்
சன்னிதிகளெல்லாம்
மாறி மாறிச்
சென்றுபார்த்தால்
அகத்தை அவனில்
லயிக்க விடாத
ஆர்ப்பாட்டங்கள்.......,
ஆரவாரங்கள்...........,
போட்டாப்போட்டிகள்.......,
ஒலி,ஒளி,சுற்றுப்புற
மாசுக்கள்.....,
சந்தைக்கடைகள்
போல்,
ச்ந்துமுனைகள்
போல்,
சட்டசபைகள்
போல்.......!
நீல பத்மநாபன்
9-11-2012
No comments:
Post a Comment