Friday, September 25, 2009

பிந்தியவன்

பிந்தியவன்

இருபதாண்டுபள்ளிச்சாலை
முப்பதாண்டுபணியிடம்
எழுபதை நெருங்கியும்
இடைவிடாஉபாசனை
வாக்தேவதையை.
முண்டியடிக்க முனையவில்லை
தெரியவில்லை?
மனமில்லை?
பின்னுக்கு
பின்னுக்கு
தள்ளப்பட்டு
கடைசிமுனையில்
வந்து நின்று
விழிமூடி
எண்சாண் கிடையாக
வீழ்ந்து
நமஸ்கரிக்கும் போதிலும்
முண்டியடித்து
முன்சென்று தொழுது
நட்டக் கண்ணை விலக்காமல்
பின்னால் நகர்ந்து நகர்ந்து
திரும்பி வருகிறவர்கள்
மேலே வந்து
விழுந்து
நசுக்க...

2 comments:

இரா. வசந்த குமார். said...

அன்பு பத்மநாபன் சார்...

அது யார் வாக்தேவதை...? புரியவில்லையே...!! மற்றபடி பின்னுக்குத் தள்ளப்படுவதை நன்றாகவே உனர்த்தியது, இக்கவிதை..!!!

Neela Padmanabhan/நீல பத்மநாபன் said...

வாக்குக்கு தேவதை சாட்சாத் சரஸ்வதி தேவி.நன்றி. நீப