எதிர்பார்ப்பு
“Grow
old with me
the
best is yet to be
the
last of life
for
which the first was made”
-Robert Browning
கடிகார முள்ளை முன்நிறுத்தி
பள்ளி கல்லூரி படிப்பு, பரீட்சைகள்,
உத்தியோக காண்ட கெடுபிடிகள்,
பண வரவு செலவு அப்பியாசங்கள்
குடும்பத்தை கட்டிக்காத்து கரையேற்றும்
சாகச
கைங்கரியங்கள்...........,
இன்னுமின்னும் எத்தனையெத்தனையோ
பிச்சுப் பிடுங்கல்களுக்கெல்லாம்
விடைசொல்லல்……… குட்பை !
காத்திருந்த ஆயுளின்
கடைசி அத்தியாயம்
கைகூடிவிட்டது …… இதோ……
ஆனால்......என்னதான் முழுமூச்சாய்
உதற முனைந்தாலும் பழசும் புதுசுமான
பிச்சுப்பிடுங்கல்கள்
தாங்கும் உள்ள, உடல் வலிமையெல்லாம்
வழியில் இழந்துபோன இந்நாட்களிலும்........!
கூடவே, சோக
வெறுமையில்
மழைகால மேகங்களாய் தாறுமாறாய்
புள்ளிக்கு வெளியே
போய்விடும்
அகக் கோலங்கள்... அலங்கோலங்கள்….
சிறப்புமிக்க அந்த இறுதி கணத்தை
இப்போதும் எதிர்நோக்கித் தொடரும்
பயணத்தில் இடையிடை
வெள்ளிவீச்சுக்களாய் மின்னி மறையும்
ஒளிக்கோடுகள் நம்பிக்கை நட்சத்திரமாயிருந்தும் அக்கரைப் பச்சையோ கானல் நீரோ
தெரியலையே மூட மனமே
நீல பத்மநாபன்
No comments:
Post a Comment