பட்டாம் பூச்சியாய்…….
நீல பத்மநாபன்
இந்நாள் வரை வாழ்ந்த
கூண்டினுள்ளிலிருந்து
விமோசனம் பெற்று
வெளியேற
பட்டாம்பூச்சியாய்
படபடத்துக்கொண்டிருக்கையில்
நீடிக்கும்
வாழ்நாட்கள்.......
நீடிகக நீடிக்க
சகஜீவிகளுக்கு அலுப்பு...
... ஆறுதல் தேறுதல்கள் இருக்கட்டும்,
சுயரோதனை வேதனைகளையெல்லாம்
ஒதுக்கித்தள்ளிவிட்டு
அவர்கள் அலுப்பை விரட்டி
விருப்பை
ஊட்ட,
குரங்காட
அந்த அந்திம நாட்களிலும்
தெரியாவிடில்.........!
* *
*
உயிரை கையில் பிடித்துக்கொண்டு
வாழ்வதாய் சொல்லக்கேட்கையில் எல்லாம்
பிடிவிட்டுவிட்டால் போய்விடுமென்றால்
போய்த்தொலையட்டுமே என
நினைந்துகொண்ட நாளெல்லாம் போய்
உடல் உபாதைகள் கட்டறுந்த இம்சைப்பிராணிகளாய்
அல்லும் பகலும் கூட்டத்தோடுத் தாக்கி
உள்ளையும் சேர்த்து நிலைகுலையச்செய்கையில்
அடிபதறி
வீழாதிருக்க
பீஷ்மரின் சரசயன நிலையிலும்
தோற்றுப்போகாதிருக்க
பிடித்து
நின்று இயக்க வலு ஒழுகித்தீராதிருக்க
உடும்புப்பிடியாய்......
அது தானா உயிர்.......?
பிப்ரவரி-2015
No comments:
Post a Comment