8 Poems of Neela Padmanabhan read by him in Tamil in The International Festival of Poetry –Kritya 2012 at Trivandrum on January 16 2012,
English and Malayalam versions (translated by the poet) are also presented on the occasion.
* 1) Passes through soul
In our place, there is a grandpa,
a great grandpa for all.
He has good desires
for each and everyone.
His age no one knows.
News flashes out one fine morning
Spreading like forest- fire;
that he is the owner, of crores and crores of properties.
People-local and outside,
Friends, foes and bystanders,
those who come and go,
who had no time till that moment,
rushed towards him.
“Where is the treasure?”
“Where is the treasure?”
“Who saw it?”
“Who took it?”
“Is the thief in the ship itself?”
“Ordinary thief or robber?”
“Where is the account?”
“You have no right,
“I am the actual possessor”
“As it is public property
it is for all countrymen and women”
“Grandpa is from our place
hence we are the natural possessors”
No end to arguments, counter arguments,
Seminars, symposiums,
heated debates, discussions, judicial cases,
twenty-four hour security coverage
with electronic camera, secret video footages
to find the secret stealing by the self styled possessors inside
or the ones from outside,
Always turmoil, commotions and confusion.
A pollution of noises and clashes;
could not blink his eyes, not a moment to recline
he passed through the soul.
*Tamil word” KADAVUL” ie God means One who passes through the soul
* 1) உள்வழி கடந்தோன்
நீல பத்மநாபன்
எங்கள் ஊரில்
யாவருக்கும் நலமே பெய்த
அன்பே பொக்கிஷமான
படுக்கைவிட்டெழா
வயோதிகராம் தாத்தாவின்
வயதென்னவென்று
யாருக்கும் தெரியாது
நாளொன்று புலர்ந்ததும்
கோடிகோடி சொத்தின் அதிபதி
அவரென்று செய்தி பரந்தது காட்டுத்தீயாய்
அந்நேரம்வரை தாத்தாவை
நினக்க நேரமில்லா உள்ளூர் வாசிகள்
வெளியூர் வாசிகள உற்றவர் பகைவர்
வந்தவர் போனவர்
யாவரும் ஓடோடி வந்தனர்
”சொத்தெங்கே சொத்தெங்கே”
”கண்டவர் எங்கே”
”கொண்டவர் எங்கே”
”கப்பலில் திருட்டா”
”வெறும் கள்வனா அசல் திருடனேதானோ”
”கணக்கெங்கே”
”உனக்கில்லை உடமை எனக்குத்தான் ’”
‘ஊருக்கு சொந்தம்,பொதுசொத்தன்றோ”
”தாத்தாவின் சொந்த ஊர்
எங்களூர் எனவே எங்களுக்குத்தான்”
தீராத வாதங்கள் விவாதங்கள்
பட்டிமன்றங்கள் வழக்காடு மேடைகள்
நீதிமன்ற வழக்குகள்
பரஸ்பரம் கையாடாதிருக்க
இருபத்தினாலு மணிநேரமும்
பாதுகாப்புக் கவசங்கள்
ரகசியமாய்
எலக்ட்ரோனிக் காமறாக்கள்
வீடியோ படபிடிப்புகள்
ஆள் அரவம்
சந்தடி சலசலப்பு வல்லடி வழக்குகள்
ஓய்ந்த நேரமில்லை
இமை மூட இயலாது
சயனம் துறந்து
உள்வழி கடந்தார் தாத்தா
* கடவுள்=உள்வழிகடந்தோன்
2 Kavi Yoogi (Saint Poet)
As he uses to exhaust his emotions and feelings
lavishly on even petty matters to others
a man of letters asks him to write poems
writing and writing of poems
his emotions feelings urges
have become more sharpen
intense harden
why not you divert your attention on yoga
to control your emotions and urges
asks a yogi
On immersion in yoga
all his emotions and urges are
more sharpen, intense and harden
with the self strength- soul power
Now with the unquenched
emotions, feelings and urges
poems and yoga too
dissolved in his life
2) கவியோகி
சின்ன விஷயங்களுக்கெல்லாம்
அமிதமாய் உணர்ச்சிகளை
விரையம் செய்வதைக் கண்டு
கவிதை எழுதத்தூண்டினார்
எழுத்தை ஆள்கிறவர்
கவிதைகள் எழுத எழுத
உணர்வுகள் உணர்ச்சிகள்
மேலும் கூர்மைபெற்றன
முறுக்கேறின
உக்கிரம் கொண்டன
உணர்ச்சிகளின் உளறல்கள்
என்றுரைத்து
யோகத்தில் சித்தத்தைச்செலுத்த
பணித்தார் யோகி
யோகத்தில் முழுக முழுக
உரம் பெற்ற ஆன்ம பலத்துடன்
உணர்வுகளும் ஊக்கம் பெற்றன
மிச்ச நாட்களின்
நகர்தலில்
முற்றிலும் சமனம் அடையா
உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட
சேர்ந்துகொண்ட
கவிதையும் யோகமும்
3 VIJAYA DASAMI
Last year this day
he was across the oceans
in the foreign land
today here in his own house
in the pooja room
nobody is here
loneliness
in the front
Goddess of words You
around You
other Deities
By forcefully withdrawing
his senses from the turmoil of vehicles
outside the road
and soar thoughts of
life’s bitterness
he severely tries
to dissolve his self
to Your lotus feet
and Your veena’s
nadabrahma
4 AFTER REMOVING THE NAME
After death one may go to hell or heaven
the cage in which he once lived
is now empty
it is now kept in a glass box
as an exhibiting thing
and is being pulled
across the country
And, the ash
after cremation
is collected
in small earthen pots
and is being spread
here and there
and is kept securely
Are all these either for
the peace of the soul
which is omnipresence
or for vacating the memories of the expired ?
3) விஜய தசமி
சென்ற விஜயதசமி
கடல் கடந்த
சீதள பூமியில்
இன்று இங்கே
சொந்த வீட்டில்
பூஜையறையில்
யாருமில்லாத
தந்நதனிமை
முன்னால்
வாக்தேவதை
நீ
சுற்றி ஏனைய
தேவதைகள் தேவர்கள்
வெளியில் வீதியில்
வாகனங்களின் சந்தடியில்
உள்ளே மனப்பாதையில்
வாழ்வின் கசப்புக்களில்
வழுதிச்செல்லும் மனதை
பிடித்திழுத்து
உன் பாதசரணத்தில்
உன் வீணைநாதத்தில்
கரைத்திடும்
விடாமுயற்சி
வெற்றிபெற அருள்வாய்
4) பெயரினை நீக்கிய பிறகும்
செத்தபின் சிவலோகம் வைகுண்டம்
இல்லை நரகமோ போவது இருக்கட்டும்
விட்டுவந்த வெறுங்கூண்டை
கண்ணாடிப்பேழைக்குள்
காட்சிப்பொருளாக்கி
ஊரூராய் இழுத்துவந்து
விழாவெடுப்பதும்
கட்டையில் வெந்தபின்னர்
கலையங்களிலாக்கி
இங்குமங்கும் இறைப்பதும்
பத்திரப்படுத்துவதும்
அங்கிங்கில்லானபடி
எங்குமே நிறைந்திடும்
ஆத்மாவின்
சாந்திக்கா இல்லை
நினைப்பொழிக்கத்தானா
5 THE DOOR
From birth
till now
cried with grief
rocked with pain
swelled with joy
festered with hate
mellowed with love
flustered with rage
melted with devotion
swayed with jealousy
and kept on knocking….
but the door
is yet to open
5) கபாடம்
வந்தநாள் முதல்
இந்தநாள் வரை
துயரத்தால் அழுதும்
வேதனையால் துடித்தும்
உவகையால் பூரித்தும்
வெறுப்பால் கசந்தும்
காதலால் நெகிழ்ந்தும்
கோபத்தால் படபடத்தும்
வெறியால் சீறியும்
பக்தியால் உருகியும்
பொறாமையால் புலம்பியும்
தட்டிக்கொண்டே இருப்பினும்
கபாடம் திறமினோ?
6 NOON TIME RAIN
By the forceful
small waterfalls
from the sunshade
light violet
kanakambara flowers
in the front courtyard
are cut down neck-less
mind is filled
with the mournful
darkness of the dusk
6) நடுமதிய மழை
சடசடவென்று
சன்ஷேடிலிருந்து
சிற்றருவிகள் பாய
முற்றத்து இளம் கனகாம்பரங்கள்
அறுந்து விழ
உள்ளுக்குள்ளிலும்
புகையிழையாய்
நிரம்பி நிற்கும்
அந்தியின்
மோன இருள்
7 COW
Looks like cow
When it becomes furious
as a tiger
to butt sharp horns
and to kick hard hooves
appear mysteriously.
7) பசு
பார்வைக்கு பசு
புலியாய்ச் சீறுகையில்
முட்டி மோத
கூர்கொம்புகளும்
உதைத்துச் சாய்க்க
குளம்புக் கால்களும்
வந்ததின் மாயை என்ன?
8 CHARIOT ROAD
Additions
those with me;
those away from me
are subtractions.
As the journey of life
Continues
the mournful song
of the krauncha bird
as it cries out its heart
at parting
fluttering its wings;
the wounds of heart
caused by
the arrows of hate
As I plough my inner self
pell-mell
drops of blood
get scattered;
it is a battlefield.
As the universe is shaken and
it is a joyous dance
arrogance,
envy,
rage, frustration,
the thirst for fame-
their sharp points
get blunted, are thrown off.
Illumination
that dispels
the darkness of ignorance
athwart the eight directions
trills along
the Lord of the sky-
the sun
that drives
the chariot of time which
day after day
runs fast
along the way
that is the way.
8) தேரோடும் வீதி
இணைந்தவர்கள் கூட்டல்களாகி
கழந்தவர்கள் கழித்தல்களாகி
வாழ்க்கைப்பயணம்
தொடர்கையில்
கிரவுஞ்சப்பட்சியின்
விரககீதமாய்
சிறகடித்து ஒலிசெய்யும்
நெஞ்சத்தடம்
சொல் ஏறுகள்
தாறுமாறாய்
உழுதுமறித்திட
குருதித்துளிகள் தெறித்திடும்
யுத்தக்களம்.
அண்டம் கிடுங்கிட
ஆனந்த நர்த்தனம் ஆடிட
அகந்தை அசூயை
கோபதாபப்
புகழ்ப்பேராசைகளின்
கூர்முனைகள
நசுங்கிச்சிதறிட
அஞ்ஞான இருளகற்றும்
மெய்ஞானப் பேரொளி
அஷ்டதிக் முகங்களில்
பூசிச் சிலிர்த்திட
ஆதித்த தேவனின்
காலத்தேர் சக்கிரங்கள்
நித்தம் நித்தம்
ஓடோடிக்கொண்டிருக்கும்
வீதியாம்
விதியதன் வீதி .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment