Friday, June 11, 2010

பள்ளிகொண்டபுரம் சினிமா-நீதிபதி தீர்ப்பு

செய்தி
பள்ளிகொண்டபுரம் சினிமா பெயரிடும் பிரச்னை

நாவலாசிரியர் நீலபத்மநாபனின்
அனுமதி பெறவேண்டும்

திருவனந்தபுரம் மாவடட நீதிபதி தீர்ப்பு

திருவனந்தபுரம்,ஜூன் 10
பள்ளிகொண்டபுரம் என்ற சினிமா பெயரிடும்
வழக்கில் நாவலாசிரியர் நீலபத்மநாபனின்
அனுமதி பெறவேண்டும் என்று திருவனந்தபுரம்
மாவட்ட நீதிபதி கவுசர் தீர்ப்பு கூறினார்.
அனில்குமார் தயாரித்துவரும் புதிய தமிழ்
சினிமா ஒன்றுக்கு பள்ளிகொண்டபுரம் என்று
பெயரிட்டு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலாசிரியர்
நீலபத்மநாப்ன் பள்ளிகொண்டபுரம் நான் எழுதிய
நாவலாகும், இந்தபெயரை சூட்டக்கூடாது என
வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.மாவட்ட 3-வது நீதிமன்ற
நீதிபதி கவுசர் கூறிய தீர்ப்பில் புதிய
சினிமாவிற்கு பள்ளிகொண்டபுரம் என்று
பெயரிடவோ நாவலின் ஒரு பகுதியை சினிமாவில்
சேர்ப்பதற்கோ நீலபத்மநாபனின் அனுமதி
பெறவேண்டும் என்று கூறினார். தினத்தந்திநாகர்கோவில் 10-6-2010 வியாழக்கிழமை

2 comments:

பாரதி மணி said...

எழுத்தாளர்களின் படைப்புகளை எப்படி வேண்டுமானாலும், திருடி தான் காசு சம்பாதிக்கலாம் என்றிருக்கும் இக்காலத்தில் இது ஒரு நல்ல தீர்ப்பு!

குருதிப்புனல் என்று தன் படத்திற்கு பெயர் வைக்குமுன்னால், கமல் இ.பா.வை சந்தித்து, அனுமதி வாங்கினார்.

பாரதி மணி

Neela Padmanabhan/நீல பத்மநாபன் said...

மிக்க நன்றி அன்புடன் நீல பத்மநாபன்