Monday, September 28, 2009

சப்ததி

சப்ததி
மீண்டும் ஒருமுறை
உனை நாடி
வந்திருக்கின்றேன்
ஓர் கதைபோல்
எழுபது ஆண்டுகள்
ஆண்டுதோறும்
சித்திரை பூருருட்டாதியில்
உனை நாடி
வரத்துவங்கி
ஆண்டுகள் எத்தனையென்று
ஞாபகம் இல்லை
பயணமென்றாலே
வழக்கமான
பதட்டம்
பதைதைப்பு
ஆண்டாண்டு
நீண்டு
நீண்டு செல்லும்
உன் பக்தர் வரிசையை
கண்டு
நம் முறை
எப்போ வந்திடுமோ
என்ற ஏக்கம்
ஒரிருமுறை
உடம்பில்
நிகழ்ந்த உபாதைகளை
நினைந்து பயம்
இனி இந்த தேதி
இந்த நேரம்
என்று சுயமாய்
விதித்திடும்
கட்டாயங்களில்லை
நீ அழைத்தால்
எந்த நேரமும்
எங்கிருந்தும்
வரும்
வரம் தா
எங்கும்
என்றும்
நிறைந்தவனே
குருவாயூர்
அப்பனே

2 comments:

இரா. வசந்த குமார். said...

அன்பு பத்மநாபன் சார்...

இந்த கவிதையை இப்போது தான் படித்தேன். மிக நன்றாக இருக்கின்றது.

Neela Padmanabhan/நீல பத்மநாபன் said...

நன்றி