"Nothing can make you unhappy, if you
choose to be happy;
And nothing can make you happy, if
you choose to be unhappy."
"The greatest sin against spirit
is not to be happy"
-Yogananda
எந்நேரமும் நீரில் ஈரம் போல் விட்டுப்பிரியாமல்
வாட்டி
வதைத்திடும் உள்ள, உடல்
உபாதைகள்,
வலிகள்
கொல்லாமல் கொன்றுகொண்டிருந்தும்
வெளிகாட்டாதிருக்க முயன்று, கூடியமட்டும்
யாருக்கும்
தொந்தரவு கொடுக்காமல்
ஆயுள்
முடியும் வரை வாழ்ந்து தீர்த்து விடுவதென்று
சகஜபாவமுடன்
நிலைகுலையாமல்
நடமாடும் தீச்சுடராய்
எரிந்தடங்கிக்கொண்டிருப்பவர்களை,
எல்லாம்
தெரிந்திருந்தும் , இதுதான்
தக்க தருணமென்று
சீண்டி
வேடிக்கைப்பார்க்கும்...............
நீல பத்மநாபன்