யாதும் ஊரே……
யாதும் ஊரே என்ற உலகபிரஜை அந்தஸ்து
ஒவ்வொரு குடிமகனுக்கும் வந்துவிட்ட இந்நாளிலும்
பிறந்த, சொந்த ஊர்களை தேடிச்செல்வது பிற்போக்கா?
உணர்ச்சி உந்தலில் இருந்து குதறி விலகி
ஆய்கையில் இந்த ஊர்களுக்கு என்ன மவுசு?
பிறந்த நாளும் நேரமும் போல் நிலமும்
கிரங்களின் நிலைக்கு--விதி, குண நிர்ணயிப்புக்கு
துணை
புரியுமா, வழி சொல்லுமா.....?
கேள்விஞானமாயிருந்தும், ஐயத்திற்கிடமின்றி
பெற்றோர்களிடமிருந்து தெரிந்துகொண்டது
பிறந்த ஊர் மட்டுமே…!அம்மாவின்
அப்பா-
தாத்தாவின் சொந்த ஊர் துறைமுக சிற்றூரை
விட்டு தொழில் நிமித்தம் பக்கத்திலிருந்த
சிறு பட்டணத்திற்கு பாட்டியுடன்
குடி வந்துவிட்டதினால் அம்மா பிறந்த ஊர்
இவ்விரண்டில் ஒன்றாக இருக்கலாம்--ஊகம்தான்
அன்று கேட்கத்தோன்றவில்லை,
ஆனால், மணமாகி அப்பாவுடன் இந்நகரம்
வருவதுவரை வாழ்ந்து வளர்ந்த
சிறு பட்டிணத்தை சொந்தஊராக கொள்ளலாமா ?
அப்பாவின் அம்மா-பாட்டியின் ஊர்
அம்மாவின் ஊரை அடுத்த திரு வாழும் சிற்றூ
அந்த பாட்டியை மணந்தவர்--தாத்தாவின் ஊர்
தேங்காய்க்கு பேர்பெற்ற பழமையான இன்னொரு சிற்றுர்
தாத்தா இளமையிலேயே
இந்நகருக்கு வியாபாரம்
செய்ய வந்துவிட்டவர், அப்பாவுக்கு அறிவு வருமுன்னே
இயற்கை எய்தியவர்…அப்பாவின் பிறப்பு
பாட்டி ஊராக இருப்பினும் பின்னர் வாழ்ந்து வளர்ந்து
மடிந்த இந்நகரே அவர் சொந்த ஊர்….
மேற்படி ஊர்களுக்கெல்லாம் சென்று பழகிய
அனுபவம் உண்டு, அப்பாவின் அப்பா ஊர் தவிர...!
அவ்வூருக்கும் செல்வது இன்று நாளை என்று
என்று
வேண்டுமானாலும் என இன்று வரை
தொடரும்
கனவாகவே ........
நீல பத்மநாப்ன்
..
.