Sunday, April 3, 2016

பார்வை



                    பார்வை

             வீட்டிலும்-வெளியிலும் தான்,
         வேறு பலர் பார்வை வட்டத்தில் சிக்காதவை
        விரும்பினாலும் இல்லாவிடிலும்
            வந்து சிக்கி, சங்கடப்படுத்திய,
            சஞசலம் கொள்ள வைத்த
             இக்கட்டன கட்டங்கள்
            நேற்றைய பழம் நினைவாகி விட்டனவா?
...
      காலத்தின் கோலத்தில்
           அடிபட்டு, தேய்மானம் சம்பவித்த
           ஏனைய உறுப்புக்களிருந்து
           விழிகளுக்கு மட்டும்
         விலக்களிக்காத காலதேவனுக்கு
          நன்றி தெரிவிக்க விடாது
          கண்களில்  ஊசிமுனைக் குத்தல்களும்
            குடைச்சல்களும்....
           வலியைத் தாங்கும் வலுவை
       பரீட்சித்துப் பார்க்கிறானோ
       எல்லாம் வல்லவன்?
                              
                          நீல பத்மநாபன்