Thursday, January 28, 2016

கடிதம்



                                          கடிதம்

                     கல்லறையில் கசங்கிய
                               மலர்களுக்கிடையிலிருந்து
                              கண்டெடுத்த கடிதம்;

                            -எதற்கெடுத்தாலும்
                             தர்க்கங்கள்குதர்க்கங்கள்
                           வாதங்கள்   விதண்டா வாதங்கள்
                          ஓவென்ற ஆர்ப்பாட்டங்கள்....
                         என்னதான் முயன்றாலும்
                         பொருந்திப் போக முடியாத
                          வாழ்க்கைப் பங்காளியின் கூட
                         மணம் முறித்து விலகிப்போய்விடாமல்
                          ஐம்பது ஆண்டுகளுக்கு மேல்
                          வாழ்ந்ததற்கு கின்னஸ்புக்கில் இடம்....

                           வாசித்துமுடிக்குமுன்
                          பக்கத்து கல்லறையில் அதிர்வு...
                           சுற்றி நின்ற மரங்களின் உச்சியில்
                      ஹோவென்ற சலசலப்பு;

                          -மேற்படி கல்யாண குணங்கள்,
                            எழுதிய ஆளுக்கே சொந்தம்
                           முறித்துக்கொண்டு ஓடிப்போய்விடாது,
                          அந்த ஆளுடன் வாழ்ந்து முடித்த
                           எனக்குத்தான் அந்த புக்கில் இடம்.....

                                  நீல பத்மநாபன்