சமய சந்தர்ப்பம்
நீல பத்மநாபன்
எல்லோருக்கும்தான்
பேசத்தெரிகிறது...
செய்கையிலும்
சளைத்தவர்களல்ல..
ஆனால்
பேச்சும் செயலுமெல்லாம்
என்ன
எங்கே
எப்போ-
முந்தியா
பிந்தியா எனத்
தெரியாமல்
பிரயோகிப்பதால் தானா
அனர்த்தங்கள் யாவும்?
இளமை முகத்தில்
மட்டுமன்றி
அங்கங்கள் அனைத்திலும்
பொங்கி வழிந்துமொண்டிருந்த
காலங்களிலெல்லாம்
வெறும் பார்வை
பரிமாற்றங்கள்
கனவுகள்
கற்பனைகளுக்கு மேல்
போக அஞ்சிக்கிடந்தது,
மணமாலையின்
அனுமதி பெற்ற்பின்
கிளர்ந்தெழுந்து அடங்கி ஒடுஙகியும்
முற்றிலும் சமனம் பெறாமல்
காலம் கடந்து மீண்டும்
தலைதூக்கிற்து என்றால்...........
20-3-2015