Thursday, October 13, 2011

* உள்வழி கடந்தோன்

* உள்வழி கடந்தோன்

நீல பத்மநாபன்
எங்கள் ஊரில்
யாவருக்கும் நலமே பெய்த
அன்பே பொக்கிஷமான
படுக்கைவிட்டெழா
வயோதிகராம் தாத்தாவின்
வயதென்னவென்று
யாருக்கும் தெரியாது
நாளொன்று புலர்ந்ததும்
கோடிகோடி சொத்தின் அதிபதி
அவரென்று செய்தி பரந்தது காட்டுத்தீயாய்
அந்நேரம்வரை தாத்தாவை
நினக்க நேரமில்லா உள்ளூர் வாசிகள்
வெளியூர் வாசிகள உற்றவர் பகைவர்
வந்தவர் போனவர்
யாவரும் ஓடோடி வந்தனர்
”சொத்தெங்கே சொத்தெங்கே”
”கண்டவர் எங்கே”
”கொண்டவர் எங்கே”
”கப்பலில் திருட்டா”
”வெறும் கள்வனா அசல் திருடனேதானோ”
”கணக்கெங்கே”
”உனக்கில்லை உடமை எனக்குத்தான் ’”
‘ஊருக்கு சொந்தம்,பொதுசொத்தன்றோ”
”தாத்தாவின் சொந்த ஊர்
எங்களூர் எனவே எங்களுக்குத்தான்”
தீராத வாதங்கள் விவாதங்கள்
பட்டிமன்றங்கள் வழக்காடு மேடைகள்
நீதிமன்ற வழக்குகள்
பரஸ்பரம் கையாடாதிருக்க
இருபத்தினாலு மணிநேரமும்
பாதுகாப்புக் கவசங்கள்
ரகசியமாய்
எலக்ட்ரோனிக் காமறாக்கள்
வீடியோ படபிடிப்புகள்
ஆள் அரவம்
சந்தடி சலசலப்பு வல்லடி வழக்குகள்
ஓய்ந்த நேரமில்லை
இமை மூட இயலாது
சயனம் துறந்து
உள்வழி கடந்தார் தாத்தா
* கடவுள்=உள்வழி கடந்தோன்